நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்: விசாரணை சாட்சி

கோத்தா கினபாலு:

திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை  படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்.

மறைந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை சாட்சியான லினா மான்சோடிங் இதனை நீதிமன்றத்தில் கூறினார்.

13 வயது மாணவி ஷாராவின் மரணத்திற்கு முன்னர், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் திருட்டு வழக்கு குறித்து துன் டத்து முஸ்தபா பள்ளி மாணவர்களிடையே பேச்சு நடந்து வந்தது.

ஷாரா கைரினா மீது ஏ என குறிப்பிடப்படும் மாணவரின் பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டதாக பள்ளி மாணவிகள் பேசியதாகக் கூறினார்.

பள்ளியின் பாதுகாவலராகவும் இருக்கும் லினா,  ஜூலை 15 ஆம் தேதி தனது பணப்பையை தொலைத்துவிட்டதாக A தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.

காலையில் பணப்பை தனது பையில் இருந்ததாகவும், இரவில் அது காணாமல் போனதாகவும் அவள் (அ) என்னிடம் சொன்னாள் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset