நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்

அலோர்ஸ்டார்:

பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணி  புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த  கட்சியின் நடவடிக்கை இன்று அரசாங்கத்தின் தலைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.
 
தேசியக் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர்கள் பற்றாக்குறையாக இல்லை.

மேலும் 16ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி நாட்டை வழிநடத்த உயரும் என்ற நம்பிக்கையை தாம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இன்று மக்கள் யார் பிரதமர் ஆவார்கள். தேசியக் கூட்டணியிலிருந்து ஏன் பலர் பிரதமர் ஆவார்கள் என்று கேட்கிறார்கள்?.

மேலும் பலர் பாஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்கிறார்கள்?.

அவர்கள் ஏன் எங்களிடம் கேட்கிறார்கள்? ஏன் தேசியக் கூட்டணியிடம் கேட்கிறார்கள்?.

அவர்கள் ஏற்கெனவே உள்ள அமைச்சர்கள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதால், அவர்களுக்கு பிரதமர் மீது நம்பிக்கை இல்லை.

மக்கள் அரசாங்கத்தை வழிநடத்த ஒரு புதிய நபரைத் தேடுகிறார்கள். 

கடவுள் விரும்பினால் தேசியக் கூட்டணி 16ஆவது பொதுத் தேர்தலில் நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும்.

கெடா பாஸ் கட்சியின் 66ஆவது இளைஞர் பிரிவின் மாநாட்டை திறந்து வைத்து அவர் தனது உரையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset