நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலை வழக்கு என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும் போலிசார் மௌனம் காத்து வருவதாக சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்

கோலாலம்பூர்:

கொலை வழக்கு என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும் போலிசார் மௌனம் காத்து வருவதாக சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடற்படை அதிகாரி சூசைமாணிக்கத்தின் மரணம் கொலை வழக்காக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருடம் ஆகி விட்டது.

இருந்த போதிலும் அது தொடர்பான விசாரணையை போலிஸ் மீண்டும் தொடங்கியுள்ளதா என்று எங்களுக்கு தெரியவில்லை.

புக்கிட் அமான், சுஹாகாம், சட்டத்துறை தலைவர் அலுவலகங்களுக்கு மனுக்கள் அனுப்பிய போதிலும், அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை எஸ். ஜோசப் கூறினார்.

தனது மகன் சார்லஸுடன் ஒரு செய்தியாளர் சந்திப்பில், 

2018 ஆம் ஆண்டில் தனது மகனின் மரணம் குறித்த விசாரணையை மீண்டும் தொடங்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset