நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பு

பட்டர்வொர்த்:

அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள தங்களின் புறப்பாட பாடத்தில் தங்களின்  திறனை வெளிப்படுத்தவும் புற நாடுகளின் கலை கலாச்சார உறவுகளை தெரிந்து கொள்ளவும்  நல்லுறவுகளை வலுப்படுத்திக்கொள்ளவும்  பினாங்கு மாநிலத்தில் அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாம் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது.

கல்வியமைச்சின் அனுமதியுடன் ஏற்பாட்டில் நடைபெற்ற இதில் இந்தோனேஷிய, தாய்லாந்து நாடுகளில் இருந்து மாணவர்கள பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளி், பினாங்கு மாநில கல்வித் துறை இணை பாடத்திட்ட மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டு குழுத் தலைவர் தி. வினோத் கூறினார்.

இதில் பினாங்கு, கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களை  பிரதிநிதித்து மொத்தம் 145 மாணவர்களுடன் 50 ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.

இதற்கு முன்பு மாவட்டம் , மாநிலம், தேசிய நிலையில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இன்று அனைத்துலக நிலையில் இம்மாதம் 10ஆம் தேதி தொடங்கி இன்று நடத்தப்பட இந்த முயற்சி பயன் அளிதுள்ளது. 

இதில் தாய்லாய்ந்து மற்றும் இந்தோனேஷிய ஆகிய இரு நாடுகள் கலந்துக் கொண்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகமான நாடுகள் நாடுகள் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது இதன் வழி ரதமிழ்ப்பள்ளி மாணவர்கள் மேலும் பயன்பெறவும் வாய்ப்புகள் வழங்கும் என்று நம்பிக்கைத்  தெரிவித்தார்.

இந்த நிகழ்வை மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கே. புலேந்திரன் நிறைவு செய்து வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset