நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை

கோலாலம்பூர்:

வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும் என கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

நேற்று கம்போங் சுங்கை பாருவில் சில வீடுகளை காலி செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து, கிராமவாசிகள் உரிமைகள் குழு மத்திய அரசு பிரதிநிதிகளுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தது.

செயல்முறைக்காகக் காத்திருக்கும் அதே வேளையில், வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

மக்களின் வழக்கறிஞர் என். சுரேந்திரன், வெளியேற்றும் பணி இன்னும் தொடர்ந்தால் விவாதங்கள் சிறப்பாக நடக்க வாய்ப்பில்லை.

அது சாத்தியமில்லை. எனவே உடனடியாக தலையிடுவதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, விவாதங்கள் நடைபெற்று.

நல்ல முடிவு எட்டப்படும் வரை, வெளியேற்றத்தை நிறுத்துமாறு மேம்பாட்டாளரிடம் கேட்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset