நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் ஷாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன்; ஆனால் எந்த பதிலும் இல்லை: பாதுகாவலர்

கோத்தா கினபாலு:

நான் ஷாராவின் பெயரைச் சொல்லி அவள் கன்னத்தில் தட்டினேன். ஆனால் எந்த பதிலும் இல்லை.

பள்ளி தங்கும் விடுதியின் 65 வயதான லினா மன்சோடிங் ஜலேஹா நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

மறைந்த ஷாரா கைரினா சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்த இரவில் நான் பணியில் இருந்தேன்.

அப்போது அந்த இளம் பெண்ணின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு தட்டி அவரது பெயரைச் சொல்லி எழுப்ப முயற்சித்தேன்.

ஆனால் பாதிக்கப்பட்டவர் பதிலளிக்கவில்லை.

மேலும் பாதிக்கப்பட்டவர் குறட்டை விடுவதது போல் வேகமாக சுவாசித்துக் கொண்டிருந்தார்.

ஷாரா மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் ஏழாவது நாளில்,

ஷாரா கைரினாவின் குடும்ப வழக்கறிஞர் ஷாஹ்லான் ஜுஃப்ரியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நான்கு குழந்தைகளின் தாயான அவர்  இவ்வாறு கூறினார்.

அவர் குறட்டை விட்டு தூங்குவது போல் தோன்றியது. அவர் முதுகில் படுத்திருந்தார். 

நான் அவருக்காக வருந்துகிறேன் என்று மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹாசன் முன் சோகமான தொனியில் ஷாஹ்லானின் கேள்விக்கு பதிலளித்த லினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset