நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்

அலோர்ஸ்டார்:

தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர்  துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஆளும் தேசிய முன்னணியின் சில கூறு கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர முறையாக விண்ணப்பித்துள்ளன.

கேள்விக்குரிய கட்சிகளின் பெயர்களை தற்போது குறிப்பிட முடியாது.

ஆனால் அவர்களின் விண்ணப்பங்கள் தேசியக் கூட்டணி உச்ச மன்றத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

பல கட்சிகள் எங்களுடன் சேர விண்ணப்பித்துள்ளன. நாங்கள் ஒவ்வொன்றாக மதிப்பாய்வு செய்வோம். 

மேலும் அரசு சாரா இயக்கங்கள் உட்பட எவரையும் சேர வரவேற்கிறோம் என்று அவர் கூறினார்.

எந்தக் கட்சிகள் என்பது ரகசியமாகவே உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை நாங்கள் அதை அப்படியே விட்டுவிடுவோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset