நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேர் கைது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

தேச நிந்தனை, தேசியத் தலைவர்களுக்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட  வீடியோக்கள் வைரலாகி உள்ளன.

இந்த வீடியோவுடன் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

27, 35, 69 வயதுடைய மூன்று பேர் குற்றவியல் அச்சுறுத்தல்கள், தேச நிந்தனை, நெட்வொர்க் வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முதல் வழக்கில் ஜிப்பி சஹாக் என்ற முகநூல் கணக்கில் பதிவேற்றப்பட்ட ஒரு கருத்து இருந்தது

அதில் பொது ஒழுங்கை அச்சுறுத்தும், ஒரு தேசியத் தலைவருக்கு எதிரான குற்றவியல் அச்சுறுத்தலாக அமையக்கூடிய தேச நிந்தனை கூறுகள் இருந்தன என்று அவர் கூறினார்.

இரண்டாவது வழக்கு நேற்று கோலாலம்பூரின் கம்போங் சுங்கை பாருவில் குற்றவியல் அச்சுறுத்தல்கள் அடங்கிய உரையை நிகழ்த்திய 69 வயது சந்தேக நபர் தொடர்பானது.

மூன்றாவது வழக்கு, அய்யன் ரோஸ் என்ற பேஸ்புக் கணக்கிலிருந்து வந்த கருத்துகளை உள்ளடக்கியது.

அதில் குற்றவியல் அச்சுறுத்தல்கள் அடங்கிய கூறுகள் இருப்பதாகவும், பொதுமக்களை அச்சப்படுத்தக்கூடும் என்று டத்தோ குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset