நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது: அமைச்சர்

கோலாலம்பூர்:

கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேஹா முஸ்தபா இதனை கூறினார்.

தலைநகர் கம்போங் சுங்கை பாரு பகுதியில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டிற்குப் பிறகு தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்ட பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கான வாடகையை மேம்பாட்டு நிறுவனம் முழுமையாக ஏற்றுக் கொண்டது.

அவர்களில் பெரும்பாலோர் சுங்கை ஊடாங் ரெசிடென்சி, பத்து மூடா பிபிஆர் வீடுகளில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் டிபிகேஎல் மேற்பார்வையின் கீழ் உள்ள பிபிஆர் வீடுகள் அல்லது குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் குடியேறி வசிக்க ஒப்புக்கொள்பவர்களின் வாடகையை மேம்பாட்டாளர்கள் முழுமையாக ஏற்கிறார்.

மறுமேம்பாட்டுத் திட்டம் முடிவடையும் வரை, அவர்களுக்கு மாற்று வீடு கிடைக்கும் வரை வாடகையை மேம்பாட்டாளர்களே ஏற்பார்கள் என்று அவர் இன்று  நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset