செய்திகள் உலகம்
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
ஹண்டிங்டன்:
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷாயர் (Cambridgeshire) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் காவல்துறை இருவரைக் கைது செய்துள்ளது.
ஹண்டிங்டனுக்குச் (Huntingdon) செல்லும் ரயிலில் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவத்தினால் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
"பலர் கத்தியால் குத்தப்பட்டனர்" என்று பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை X தளத்தில் தெரிவித்திருந்தது.
ஆடவர் ஒருவர் பெரிய கத்தியை வைத்திருந்ததாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார்.
"எங்கே பார்த்தாலும் ரத்தம்" என்றார் அவர்.
சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் வருத்தமளிப்பதாகவும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) கூறினார்.
காவல்துறையின் ஆலோசனையைக் கேட்டு நடக்கும்படி அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 11:16 am
கனமழையால் மெக்காவில் திடீர் வெள்ளம்
November 12, 2025, 12:36 pm
சீனாவில் பாலம் திறக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகு இடிந்து விழுந்தது
November 12, 2025, 12:22 pm
COP30 மாநாட்டில் அத்துமீறி நுழைந்த பழங்குடி போராட்டக்காரர்கள்
November 12, 2025, 10:19 am
20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
