நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கில் பரபரப்பு: சக ஊழியர்களை தாக்கிய காவல் ஆய்வாளர் தடுத்து வைப்பு

ஜோர்ஜ்டவுன்:

சக காவலர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பினாங்கு காவல் ஆய்வாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

காவலர்களை அவமதித்ததுடன் நில்லாமல் அவர்களை தாக்கி காயப்படுத்தியதாக அந்த 35 வயது ஆய்வாளர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினம் லெபு குயின் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து அந்த ஆய்வாளர் மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டுளள்ளதாக திமுர் லவுட் Timur Laut மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி சோஃபியன் சண்டோங் (Soffian Santong) தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் பேராக் காவல் நிலையத்தில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அந்த ஆய்வாளர் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"சம்பவத்தன்று பின்னிரவு சுமார் 1.30 மணியளவில் போலிசாருக்கு அழைப்பு வந்தது. சந்தேக நபர் மது அருந்தியுள்ளதாகவும், சம்பவ இடத்தில் கூச்சல் போடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"இதையடுத்து அங்கு சென்ற போலிசார் அவரை அமைதிப்படுத்த முயன்றபோது, அந்த ஆய்வாளர் தகாத வார்த்தைகளைப் பேசியதுடன், போலிசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவும் மறுத்ததாகத் தெரிகிறது. மேலும் மூர்க்கத்தனமாகவும் நடந்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு தற்போது மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏசிபி சோஃபியன் சண்டோங் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset