செய்திகள் மலேசியா
குப்பை போட்டதற்காக 42 நபர்கள் மீது சமூக சேவை நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
குப்பை போட்டதற்காக 42 நபர்கள் மீது சமூக சேவை நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை, பொது சுத்திகரிப்பு சட்டம் 2007 (சட்டம் 672) இன் கீழ் விசாரிக்கப்படும் முதல் குழுவில் மொத்தம் 42 நபர்கள் அடங்குவர்.
இந்த சட்டம் பொது இடங்களில் சிறிய குப்பைகளை வீசுவதற்கு அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் அபராதமும் 12 மணி நேர சமூக சேவையும் விதிக்க வகை செய்கிறது.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட 40 பேர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, நேற்று இரவு சிறப்பு நடவடிக்கையின் மூலம் திடக்கழிவு மேலாண்மை, பொது சுத்திகரிப்பு கழகத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
இதில் 24 வழக்குகள் மலேசியர்கள் சம்பந்தப்பட்டவை, 18 வழக்குகள் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை என்று SWCorp தலைமை நிர்வாக அதிகாரி காலித் முகமது கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 1:11 pm
புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்
January 2, 2026, 12:19 pm
புத்தாண்டு சிறப்பு சோதனை: தாய்லாந்திலிருந்து திரும்பிய மூவர் போதைப்பொருள் வழக்கில் கைது
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
