செய்திகள் மலேசியா
கிளெபாங் கடற்கரையில் இராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்: மலேசிய அரசு இராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி
மலாக்கா:
கிளெபாங் கடற்கரையில் மலேசிய அரசு இராணுவ கடற்படை (TLDM)க்கு சொந்தமான சூப்பர் லிங்க்ஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
மாநில சுகாதாரம், மனிதவள ஒற்றுமை தொடர்பான செயற்குழு உறுப்பினர் டத்தோ நிங்வே ஹீ செம் கூறுகையில், மூத்த கடற்படை தொழில்நுட்ப நிபுணர் ஸ்ரீமலா முஹம்மது சுல்ஃபிகர் மொஹி, தற்போது மலாக்கா மருத்துவமனையின் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் இடுப்பிலும் வலது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
லெப்டினன்ட் கமாண்டர் அஃபிக் முசானி அப்துல் அஜீஸ், நுரையீரல் சிக்கல்களால் தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை ஓரளவு சரியான பிறகு, அவரும் லுமுட் இராணுவ ஆயுதப் படை மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்.
கடந்த புதன்கிழமை, மலேசிய தரைப்படையின் சிறப்பு படை குழு (GGK) 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விமானக் காட்சி பயிற்சியின் போது, மலேசிய அரசு இராணுவக் கடற்படைக்கு சொந்தமான சூப்பர் லின்க்ஸ் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிளெபாங் கடற்பரப்பில் அவசரமாக தரையிறங்கியது.
இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் போது, ஹெலிகாப்டரில் இருந்த நான்கு விமானக் குழுவினரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 1:11 pm
புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்
January 2, 2026, 12:19 pm
புத்தாண்டு சிறப்பு சோதனை: தாய்லாந்திலிருந்து திரும்பிய மூவர் போதைப்பொருள் வழக்கில் கைது
January 2, 2026, 12:08 pm
குப்பை போட்டதற்காக 42 நபர்கள் மீது சமூக சேவை நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்பட்டது
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
