நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெற்றோரை வாளால் தாக்கிய மகன்

ஈப்போ

தனது பெற்றோரை வாளால் தாக்கி கடுமையானக் காயங்களை ஏற்படுத்திய மகன் மீது  நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை, ஜனவரி 2 அன்று இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிபதி ஐனுல் ஷஹ்ரின் முஹம்மது முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  30 வயதுடைய அந்த ஆடவன், தன் மீது சுமத்தப்பட்டக் குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட அவ்வாடவர் மரணத்தை விளைவிக்கக்கூடிய கூர்மையான வாளைப் பயன்படுத்தி, 58 வயதுடைய தனது தந்தை சுஹைமி டாவி, தாயார் ஷஹலிசா அஹ்மத் ஹாஷிம் ஆகியோருக்கு கடுமையானக் காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் கிந்தா மாவட்டத்தின் பண்டார் பாரு புத்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், டிசம்பர் 26 அன்று காலை 6.30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326/326A கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அதோடு அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். மேலும், பிரிவு 326Aன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத் தண்டனை இரட்டிப்பாக விதிக்கப்படலாம்.

அவ்வாடவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த துணை அரசு வழக்கறிஞர், எம். ரவீனா, அவர் உளு கிந்தாவிலுள்ள பஹாகிய மருத்துவமனைக்கு மனநிலை பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்று, இவ்வழக்கை ஜனவரி 30-க்கு  ஒத்தி வைத்துள்ளது. 

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset