நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

பத்துமலை:

ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

பத்துகேவ்ஸ் ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் இரு முடிக் கட்டு திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

சபரிமலைக்கு செல்ல முடியாதவர்கள் இன்று தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.

அவ்வகையில் ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் அதிகரித்தாலும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வேளையில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி தலைமையிலான நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் ஐயப்ப வழிபாடு என்பது தனிநபர் வழிபாடு அல்ல.

மாறாக ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது.

இதனால் இந்த வழிபாடு குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இது வரவேற்கக்கூடிய விஷயம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset