செய்திகள் மலேசியா
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
பத்துமலை:
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.
2026ஆம் ஆண்டு புத்தாண்டு இன்று பிறந்துள்ளது.
பத்துமலை முருகப் பெருமானுக்கான பன்னீர் அபிஷேகத்துடன் இப் புத்தாண்டு மலர்ந்துள்ளது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் இந்த பன்னீர் அபிஷேகம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்ல மகிழ்ச்சியையும் வளத்தைதயும் தர வேண்டும்.
மேலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சமுதாயத்தின் ல் வெற்றிக்கு ஒற்றுமை மிகவும் முக்கியம்.
இந்த ஒற்றுமையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
மஇகாவின் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும் என்பதை கட்சியின் தலைவர் ஏற்கனவே அறிவித்து விட்டார். ஆக அதுவரை அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
மேலும் பதவி, பட்டம் இல்லை என்றாலும் மஇகா தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும்.
இதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
