நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து உறுப்பினர்கள் பிளவுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ மொஹைதின்

கோலாலம்பூர்:

பெர்சத்து உறுப்பினர்கள் பிளவுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்.

பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய அனைத்து இடைவெளிகளையும் மூடப்பட வேண்டும்.

அதே வேளையில் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பையும் உள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இருப்பினும் அவர் இனி தேசியக் கூட்டணியை வழிநடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தாண்டோடு இணைந்து, அனைத்து பெர்சத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.

பெர்சத்துவின் தலைமையை நான் இன்னும் தலைவராக வழிநடத்துகிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

நான் இனி தேசியக் கூட்டணியை வழிநடத்தவில்லை என்றாலும், பெர்சத்து தேசியக் கூட்டணி ஒரு கொள்கை ரீதியான, நிலையான விசுவாசமான கூட்டாளியாகவே உள்ளது.

மேலும் கூட்டணியின் ஸ்திரத்தன்மை மற்றும் வலிமைக்காக இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து பராமரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset