நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலை முயற்சி குற்றச்சாட்டு: இல்லத்தரசியும் அவரது ஆண் தோழனும் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜொகூர் பாரு:

கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, ஒரு இல்லத்தரசியும் அவரது வேலை இல்லாத நண்பரும், இன்று ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் தங்களது குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

என். ஏகவல்லி (46), அவரது ஆண் நண்பர் ஆர். கமலா சர்ணா (39) ஆகியோர், நீதிபதி முஹம்மது ஜமீர் சுஹைமி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மறுப்பை பதிவு செய்தனர்.

இருவரும் இணைந்து, ஏகவல்லியின் கணவரான ஜி. குமரேசன் (48) மீது, தலையணையால் முகத்தை மூடி உயிரிழப்பு ஏற்படும் வகையில் கொலை முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் திகதி இரவு 9.30 மணியளவில், ஜொகூர் பாருவில் உள்ள தாமான் எஹ்சான் பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டு, குற்றவியல் சட்டம் பிரிவு 30இன் கீழ், பிரிவு 34 உடன் இணைந்து வாசிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த வழக்கின் அரசுத் தரப்பை துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். நெவினா முன்னெடுக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பாரதி மூலம் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர்.

இந்த வழக்கு பிப்ரவரி 3-ஆம்தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset