செய்திகள் மலேசியா
சபரிமலை செல்லும் மலேசிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: யுவராஜா குருசாமி
பத்துமலை:
சபரிமலை செல்லும் மலேசிய பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பத்துமலை ஸ்ரீ ஐப்பசுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை வலியுறுத்தினார்.
ஆலயத்தில் இருமுடி கட்டு திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் கிட்டத்தட்ட 10,000த்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக செல்வார்கள்.
பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் சார்பில் 350 பக்தர்கள் சபரிமலைக்கு செல்லவுள்ளனர்.
இதே போன்று மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள்.
அப்படி செல்லும் பக்தர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
காரணம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் நிலவுவதாக அங்குள்ள தேவஸ்தானம் கூறியுள்ளது.
ஆகவே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக அங்குள்ள விதிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது என்று யுவராஜா குருசாமி கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
