நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு சிறப்பு சோதனை: தாய்லாந்திலிருந்து திரும்பிய மூவர் போதைப்பொருள் வழக்கில் கைது

புக்கிட் காயு ஹிதம்:

தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்டுவிட்டு மலேசியாவுக்கு திரும்பிய மூன்று நண்பர்கள், போதைப்பொருள் சோதனையில் நேர்மறை முடிவு வந்ததையடுத்து, நேற்று மாலை கெடா தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் (AADK) மூலம் கைது செய்யப்பட்டனர் என்று தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் இயக்குனர் கைருல் அன்வார் பின் அஹ்மத் கூறினார் 

ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதுடைய அம்மூன்று நண்பர்கள், 2026 புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, நேற்று மாலை 4 மணியளவில் இங்குள்ள குடிவரவு தனிமைப்படுத்து பாதுகாப்பு வளாகத்தில் (ICQS) கைது செய்யப்பட்டனர்.

காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற அந்த நடவடிக்கையில், மொத்தம் 13 நபர்கள், கெடா தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்புமூலம் கைது செய்யப்பட்டனர்.

“15 கார்கள், 25 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 30 நபர்களிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட 13 நபர்கள் போதைப்பொருள் பயன்பாடுத்தி இருந்தார்கள் என தெரியவந்தது. அவர்களில் பெரும்பாலோர் கெட்டமைன் (ketamin) போதைப்பொருளை பயன்படுத்தியவர்கள்,” என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பிரிவு 3(1)(a) சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset