நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்

கோலாலம்பூர்:

புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது 12,000க்கும் மேற்பட்ட சம்மன்களை போலிசார் பிறப்பித்துள்ளனர்.

புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறை இயக்குநர் முஹம்மத்  யுஸ்ரி ஹசன் இதனை கூறினார்.

நாடு முழுவதும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக காவல்துறையினர் 12,437 சம்மன்களை புத்தாண்டு கொண்ட்டாத்தின் போது பிறப்பித்துள்ளனர்.

மேலும் போலிஸார் 390 வாகனங்களையும் பறிமுதல் செய்து 25 நபர்களை சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 இன் கீழ் கைது செய்தனர்.

மேலும், 20 பேர் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் கீழும், மூன்று பேர் தண்டனைச் சட்டத்தின் கீழும், மேலும் மூன்று பேர் பிற சட்டங்களின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழுவதும் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 240 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை பல வெளிப்புற நிறுவனங்களுடன் இணைந்து மொத்தம் 327 மூத்த அதிகாரிகளும் 2,460 ஜூனியர் போலிஸ் அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மேலும் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset