நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு சவுதி அரேபியாவில் நுழைய அனுமதி

ரியாத்:

ரஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசியைப் போட்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. இது முஸ்லிம்கள் உம்ரா யாத்திரைகளில் பங்கேற்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 1 முதல் ரஷ்ய ஸ்புட்னிக் V தடுப்பூசி மூலம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சவூதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது,” என்று ஸ்புட்னிக் V இன் வளர்ச்சிக்கு நிதியளித்த ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு, "ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்ட உலகம் முழுவதிலுமிருந்து வரும் முஸ்லிம்கள் மக்கா, மதீனா நகரங்களில் உள்ள  புனிதத் தலங்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளில் பங்கேற்க உதவும்" என்று அந்த நிதியம் கூறியுள்ளது.

ஆனால், ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுள்ள வெளிநாட்டு பயணிகள்  48 மணிநேரம் தனிமைப்படுத்தப்பட்டு PCR சோதனை எடுக்க வேண்டும் என்றும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா இணைந்துள்ளது. 

அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் ஸ்புட்னிக் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset