நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் முடிவுகள் குறித்த விளக்கங்களை மாமன்னரிடம் பிரதமர் வழங்கினார்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தலைநகரில் நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்சி மாநாடு, தொடர்புடைய உச்ச நிலை மாநாட்டின் முடிவுகள் தமக்கு வழங்கப்பட்டதாக மாமன்னர் முகநூல் பதிவில் கூறினார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெற்ற 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது மொத்தம் 80  ஆவணங்கள் பெறப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்தது.

ஆசியான் உச்ச நிலை மாநாடு, கிழக்கு ஆசிய உச்ச நிலை மாநாடு, ஆசிய பூஜ்ஜிய உமிழ்வு சமூக  தலைவர்கள் உச்ச நிலை மாநாடு, வட்டார விரிவான பொருளாதார கூட்டாண்மை தலைவர்கள் உச்ச நிலை மாநாடு ஆகியவற்றின் விளைவாக அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் ஆசியான் தலைவர்களின் கூட்டு அறிக்கை ஆவணங்களில் அடங்கும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset