நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு உறுப்பினர்களுக்கு தொற்று: கிளந்தான் சட்டமன்றம் ஒத்தி வைப்பு

கோத்தபாரு;

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கிளந்தான் சட்டமன்றம் இரு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொற்றுப்பரவலைத் தடுக்கும் வகையில் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்துல்லாஹ் யாகூப் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 7ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற  இருந்ததாகவும், எனினும் நடப்பு நிலைமையை கவனத்தில் கொண்டு கூட்டத்தொடர் முன்பே முடித்துக்கொள்ள பட்டதாகவும் சட்டமன்ற சபாநாயகர் அப்துல்லாஹ் யாகூப் (Abdullah Yakub) கூறினார்.

தஞ்சோங் மாஸ் Tanjong Mas, தென்டோங் Tendong சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மொஹம்மத் ரோஸ்லி இஸ்மாயிலும் தம்மை தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படும் முன்பே, கிளந்தான் மாநில 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset