செய்திகள் மலேசியா
போர்ட் கிள்ளான் டெப்போ தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும்: ஸ்ரீ ரமேஷ்
ஷாஆலம்:
போர்ட் கிள்ளான் டெப்போ தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும்.
மலேசிய தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீ ரமேஷ் இதனை வலியுறுத்தினார்.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் தீபகற்ப மலேசியாவிற்கு தென்னிந்தியத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டு போர்ட் கிள்ளான் டிப்போவில் தான் இறக்கப்பட்டனர்.
பின்னர் இங்கிருந்து தான் பல்வேறு தோட்டங்களுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இப்படி சரித்திரப்பூர்வமான இடத்தில்தான் இந்த தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் வரலாற்றை கொண்டதாகும்.
இவ்வாலயத்தின் நிலத்தை முறையாக பெற ஆலய நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆலயத் தலைவர் டத்தோ செல்வம் தலைமையில் இந்த முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு அந்த நிலம் வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இது ஆலய நிர்வாகம் உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலை முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவ் இது குறித்து எதுவும் பேசவில்லை.
தற்போதைய ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு எங்களை சந்திக்கவே மறுக்கிறார்.
டெப்போவும் இந்த ஆலயமும் மலேசிய இந்தியர்களின் மிகப் பெரிய அடையாளமாகும்.
இந்த அடையாளத்தை அழிக்க நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம்.
இதன் அடிப்படையில் தான் சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியிடம் மகஜர் வழங்கப்பட்டது.
இந்த மகஜருக்கு மந்திரி புசார் உரிய பதில் அளிக்க வேண்டும்.
அதே வேளையில் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும் இன்றைய ஆட்சிக் குழு உறுப்பினரும் பதில் அளிக்க வேண்டும்.
முதலில் அவர்கள் எங்களை சந்திக்க வேண்டும்.
ஆலய விவகாரங்களில் வீர வசனம் பேசாமல் நமது அடையாளமான இந்த ஆலயத்தை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.
இதுதான் எங்களின் கோரிக்கை என்று ஸ்ரீ ரமேஷ் கூறினார்.
மலேசியாவுக்கு இந்தியர்கள் வந்ததற்கு இந்த இடம் தான் ஒரு அடையாளம்.
இந்த அடையாளத்தை அழிக்க நாங்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டோம்.
எங்களால் முடிந்தவரை இந்த ஆலயத்தையும் நிலத்தையும் பாதுகாக்க போராடுவோம் என்று ஆலய தலைவர் டத்தோ செல்வம் கூறினார்
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 5:05 pm
“மலேசிய உள்நாட்டுச் சுற்றுலாவில் அதிரடி வளர்ச்சி”: புள்ளிவிவரத் துறை அதிகாரி உசிர் மஹிதின்
March 17, 2026, 5:02 pm
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல்
March 17, 2026, 3:56 pm
நோன்பு பெருநாளுக்கு 50 சதவீதம் டோல் கட்டணம் தள்ளுபடி
March 17, 2026, 3:55 pm
“நாட்டிற்காக சமாதானம் முக்கியம்”: ஜாமினில் வெளியான ஜம்ரி வினோத்
March 17, 2026, 3:05 pm
விமான நிலையத்தில் 24 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது
March 17, 2026, 3:03 pm
மனநல பாதிப்பால் நேர்ந்த விபரீதம்: மலேசியப் பெண் காவலரைத் தாக்கிய வெளிநாட்டுப் பெண் கைது
March 17, 2026, 3:01 pm
