நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை

பேங்காக்:

தாய்லாந்தின் பிரபல Hong Thai மூலிகை மூச்சிழுப்பு மருந்து (inhaler) மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று தாய் சுகாதாரத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது

Hong Thai Panich நிறுவனம் தயாரித்த மருந்துகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

நுண்ணுயிரியல் சோதனையின்கீழ் மருந்தின் ஒரு தொகுதி தரநிலைகளை எட்டவில்லை எனத் தாய்லந்தின் உணவு, மருந்து நிர்வாகம் (FDA) கூறியது.

மூலிகை மருந்தை வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் பொது மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நிர்வாகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

பாதிக்கப்பட்ட மருந்துகள் 2024இல் டிசம்பர் 9ஆம் தேதி தயாரிக்கப்பட்டன. அவை 2027ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி காலாவதியாகும்.

Hong Thai Panich நிறுவனம் பரிசோதனையின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது.

"பாதிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் மீட்டுக்கொள்ளப்பட்டன. உணவு, மருந்து நிர்வாகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மருந்தை உடனடியாக அழிப்பதற்குச் செயல்படுகிறோம்," என்றது நிறுவனம்.
தொடர்புடையது:

பிரபல Hong Thai மூலிகை மருந்து குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது தாய்லாந்து சுகாதாரத்துறை. யாராவது வீடுகளில் வைத்திருந்தால் வீசிவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset