நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்

சிங்கப்பூர்:

சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெற செயற்கைத் தொழில்நுட்பம் உதவவிருக்கிறது.

செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டமைப்பு அடுத்த ஈராண்டுக்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

அதன்வழி மனிதவளத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சோதனைகள் கடந்த ஏப்ரலில் தொடங்கின.

உற்பத்தித்திறனை அது 15 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தியுள்ளது.

செயற்கைத் தொழில்நுட்பம் சார்ந்த மற்றொரு கட்டமைப்பும் சோதனை செய்யப்படுகிறது.

விமான நிலையத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அது தகவல்களைத் திரட்டுகிறது.

மனிதவளத்தையும் கருவிகளையும் தேவையான இடங்களுக்கு அனுப்ப அது உதவுகிறது.

- ரோஷித் அலி

​​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset