நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு

காஸா:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழந்துள்ளனர். 

காஸா மீது உடனடியாக ராணுவத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்ம் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டின் போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. 

இரவு முழுவதும் இஸ்ரேல் காஸா மீது குண்டு வீசியது. ரமல்லாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்களின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். 

பாலஸ்தீனர் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியர்கள் 2 ஆண்டில் 1,059 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset