செய்திகள் உலகம்
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
சிங்கப்பூர்:
சிண்டா ஆண்டுதோறும் நடத்திவரும் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்குப் பலரும் நன்கொடை அளித்துவரும் நிலையில், இந்திய முஸ்லிம் பேரவையும் இதில் இணைந்துள்ளது.
இவ்வாண்டு அஃப்லாக் ஸ்டார்ஸ் அமைப்பு, கட்டிமேடு, ஆதிரெங்கம் முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், கொடிக்கால்பாளையம் சங்கம், முஸ்லிம் லீக் சிங்கப்பூர், நாகப்பட்டினம் சங்கம், பொதக்குடி சங்கம், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சலாம் அமைப்பு, தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் ஆகியவற்றோடு இந்திய முஸ்லிம் பேரவையின் ஆதரவாளர்களும் புரவலர்களுமான தணிக்கையாளர் அசன் மசூது, ராயல் கிங்ஸ் குழுமத்தின் திரு சிராஜுத்தீன், டிஎம்வொய் ஜுவல்லர்சின் திரு சலீம், நைனா முஹம்மது அன் சன்ஸின் திரு ஆதம் சாஹுல் ஹமீது, பாவா டெலிகசியின் முஹம்மது ஃபாரூக் ஆகியோரும் கைகோத்தனர்.
இம்மாதம் 17ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைந்துள்ள சிண்டா புரோஜெக்ட் கிவ் அரங்கில் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முஹம்மது பிலால் தலைமையில் ஒன்றுகூடி தங்களுடைய நன்கொடைகளான $8,000ஐ சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி இரா.அன்பரசுவிடம் வழங்கி தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.
வசதிகுறைந்த இந்தியக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் புரோஜெக்ட் கிவ் திட்டத்தின் கூடம், இந்த ஆண்டும் கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைக்கப்பட்டது.
நன்கொடையாளர்களும் பொதுமக்களும் அங்குச் சென்று தங்கள் ஆதரவை நல்கி வருகிறார்கள்.
ஆதாரம்: தமிழ் முரசு
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 11:12 am
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
