நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்க: MYDIN உரிமையாளர் கோரிக்கை

கோலாலம்பூர்:

உற்பத்தி மற்றும் வேளாண் தொழில்துறைகளில் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக மைதீன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் Ameer Ali Mydin தெரிவித்துள்ளார்.

அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டில் பல்வேறு துறைகளில் அந்நியத் தொழிலாளர்களின் தேவை உள்ளது என்றும், அவர்களை வரவழைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக உணவக, கட்டுமானத்துறைகளில் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

உணவக துறையில் வேலை பார்த்து வந்த ஏராளமான அந்நியத் தொழிலாளர்கள் நாடு திரும்பிவிட்டதாக அத் துறையைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இத்தகைய சூழலில் மைதின் உரிமையாளரும் தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset