செய்திகள் உலகம்
கென்யாவில் சுற்றுலா விமானம் விபத்து: ஜென்மனியர்கள் உட்பட 11 பேர் மரணம்
டியானி:
கென்யாவின் கடற்கரை அருகே சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விமானம், பிரபலமான டியானி கடற்கரை விடுதியில் இருந்து மாசாய் மாரா வனப்பகுதிக்கு செல்லும் வழியில் விழுந்ததாக கென்யா சிவில் விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோம்பாசா ஏர் சவாரி நிறுவனம், இந்த விமானத்தில் 8 ஹங்கேரியர்கள், 2 ஜெர்மனியர்கள், 1 கென்யா விமாணி பயணம் செய்ததாகவும், அனைவரும் உயிரிழந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழு ஆதரவு வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தீப்பற்றி எரியும் விமானம் மற்றும் சிதறிய பாகங்கள் உள்ள புகைப்படங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குவாலே மாவட்ட ஆணையர் ஸ்டீபன் விமானம் டியானியிலிருந்து புறப்பட்டு, குவாலே நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் விழுந்தது.
பயணிகள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள் என தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 8:52 pm
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பைகளை மேலும் விரைவாகப் பெறலாம்
October 29, 2025, 7:58 pm
காஸா மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழப்பு
October 29, 2025, 4:30 pm
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்கு சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை வழங்கிய நன்கொடை
October 28, 2025, 4:13 pm
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
