செய்திகள் உலகம்
4.2 கோடி அமெரிக்கர்கள் உணவு நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம்
நியூயார்க்:
அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும்.
நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் இந்த ஃபுட் ஸ்டாம்ப்ஸ் மூலம் ஒரு தனிநபராக இருந்தால் 190 டாலர், ஒரு குடும்பம் என்றால் 356 டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை இலவசமாக வாங்க இயலும். இதில் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், ரொட்டி ரகங்கள் உடன் இன்னும் சில உணவுப் பொருட்கள் அடங்கும். ஆனால், இந்த அட்டையை வைத்து உணவு அல்லாத மதுபானம் போன்றவற்றை வாங்க இயலாது.
ஆனால், இந்த அபாயத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளாத அமெரிக்க அரசு, இப்படியொரு நிலை உருவானால் அதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிதான் காரணம் என்ற வகையில் ஜனநாயகக் கட்சி மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜனநாயகக் கட்சியினர் அந்நியர்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஹெல்த் கேர் திட்டத்துக்காக அமெரிக்கர்களுக்கு பயனாக இருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஆபத்தில் கிடத்தியுள்ளனர். வெட்கக்கேடு.” என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது. கூடவே தேங்க்ஸ் கிவிங், கிறிஸ்துமஸ் என்ற பண்டிகைகளும் வரிசையாக வரும். இந்தச் சூழலில் ஃபுட் ஸ்டாம்ப்ஸ் நின்றுபோனால் என்னவாகும் என்ற பதற்றமும் பரவத் தொடங்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 12:31 pm
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
October 25, 2025, 3:45 pm
தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்
October 25, 2025, 3:15 pm
காசாவிற்கு அனைத்துலக இராணுவப் படைகளை உடனடியாக அனுப்புமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்து
October 24, 2025, 9:45 pm
மேற்கு கரையை இணைக்க இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மசோதா
October 24, 2025, 4:27 pm
கனடாவுடன் எல்லா வர்த்தகப் பேச்சும் உடனடியாக நிறுத்தப்படும்: டிரம்ப்
October 23, 2025, 9:46 pm
$3 பில்லியன் கள்ளப் பண விவகாரம்: முன்னாள் சிங்கப்பூர் Citibank ஊழியருக்குச் சிறை
October 23, 2025, 2:10 pm
தாய்லாந்தில் ஆலய நன்கொடையை திருடி எடுத்துக்கொண்டு ஓடிய இஸ்ரேலிய ஆடவர் கைது
October 23, 2025, 1:30 pm
