நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா

ஈப்போ:

கம்போங்  கபாயாங்கில் எழுந்தருளியுள்ள 129 ஆண்டு கால பழமை வாய்ந்தது ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் கந்த சஷ்டி பெருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று சூரசம்ஹாரா நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த வைபவத்தில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அன்றைய நிகழ்வில் போலீஸ் அதிகாரிகளின் சிறப்பு பூஜையும் நடைபெற்றதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பணி ஒய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி் டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.

இந்த ஆலயத்தில் கடந்த 21ஆண்டு காலமாக போலீசாரின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநிலததில் இரண்டாவது முருகன் ஆலயமாக விளங்கி வரும் சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் ஆலயத் தலைவர் சுந்தரராசு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset