நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர்:

இன்று மாலை 4 மணி முதல் தலைநகரில் கனமழை பெய்து வருகிறது.

இதன் விளைவாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைபட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட இடங்களில் சாலை பயன்படுத்துபவர்கள் சிரமப்படுகிறார்கள்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், போக்குவரத்து தகவல் அடிப்படையில் ஜாலான் லொக் யூ, ஜாலான் சங்கட் தம்பி டோலா, ஜாலான் யூ ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரின் பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜாலான் ராஜா சோலானில் திடீர் வெள்ளம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பகிர்ந்து கொண்ட தகவலில், தேசா பாண்டன், தாமான் டேசா, செராஸ், ஜாலான் சங்கட் தம்பி டோலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset