நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர்: ஹாங்காங் அறிவிப்பு

ஹாங்காங்:

தொற்று அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரையும் சேர்த்துள்ளது ஹாங்காங்.

சிங்கப்பூரில் இரண்டு ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஹாங்காங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு ஹாங்காங் விதிமுறைகளைக் கடுமையாக்கி வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டிலும் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதையடுத்து, சிங்கப்பூருடன் அந்நாட்டையும் தொற்று அபாயமுள்ள நாடாக ஹாங்காங் அறிவித்தது.

கடந்த மூன்று வாரங்களில் இவ்விரு நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்களுக்கு ஹாங்காங்கில் நுழைய அனுமதி இல்லை.

வெளிநாடுகளில் உள்ள ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்ல விரும்பும் பட்சத்தில் தங்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

ஹாங்காங் சென்றடைந்த பின்னர் அவர்கள் மூன்று வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset