நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்

வாஷிங்டன்:

ஈரானுடனான மோதல் போக்கிற்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) நாடுகள் ஆதரவு அளிக்காதது “முட்டாள்தனமான செயல்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். 

ஹார்முஸ் பாதுகாப்பை பலப்படுத்தும் அமெரிக்காவின் அழைப்பை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துள்ளன. இது குறித்து வாஷிங்டனில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்காவிற்கு ஆதரவாக ‘NATO’ செயல்படுகிறதா என்பதற்கான ஒரு பெரிய சோதனை இதுவெனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தனித்து முன்னெடுக்கத் தயார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 

‘NATO’ நாடுகள் மட்டுமன்றி ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய அவர், ‘NATO’-ஐ ஒரு ஒருதலைப்பட்சமான அமைப்பு என்றும், அமெரிக்காவிற்கு இந்த அமைப்பின் ராணுவ உதவி ஒருபோதும் அவசியமில்லை என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரின் நிலைப்பாட்டை ட்ரம்ப் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, மேக்ரான் விரைவில் பதவியை விட்டு விலக நேரிடும் என்றும் அவர் கிண்டல் செய்தார். 

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், ‘NATO’ நாடுகள் பின்வாங்குவது வரலாற்றுப் பிழை என்பதே ட்ரம்ப்பின் வாதமாக உள்ளது.
2025 ஜனவரியில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ‘NATO’ நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ‘NATO’, அமெரிக்காவின் உறவு மீண்டும் விரிசலடைந்துள்ளது இச்செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset