செய்திகள் உலகம்
வான்தாக்குதலில் ஈரானின் உயரதிகாரி அலி லாரிஜானி பலி: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
இஸ்தான்புல்:
ஈரானின் உயர்ந்த தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் அலி லாரி ஜானி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஈரான் அரசு செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த தாக்குதலில் அவரது மகன், உதவியாளர் ரேசா பயாத் மற்றும் பல அதிகாரிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான் அருகே துல்லியமான வான்தாக்குதலில் லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் பசிஜ் படைத்தளபதி கோலாம் ரிசா சுலைமானியும் தனித்த தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
லாரிஜானி, அண்மையில் டெஹ்ரானில் நடைபெற்ற குட்ஸ் தினக் கூட்டத்தில் பொதுமக்கள் முன் தோன்றியிருந்தார்.
அமெரிக்கா, ஈரானின் உயரதிகாரிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வரை பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில், லாரிஜானியின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை சுமார் 1,300 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல், ஜோர்டான், ஈராக், வளைகுடா நாடுகளின் மீது நடத்தியதால், மனித உயிரிழப்புகள், கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டதுடன், உலக சந்தை, விமானப் போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 9:54 am
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
March 17, 2026, 2:53 pm
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
