நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது

லண்டன்:

லண்டன் மாநகரில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர், அங்கு காப்பகத்தில் இருந்த இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்திரவதைகளைச் செய்த குற்றத்திற்காக 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 

நேதன் பென்னட் (30) என்ற அந்த நபர், தான் பணிபுரிந்த காப்பகத்தில் ஐந்து சிறுவர்களைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அவர் மீது சுமத்தப்பட்ட வன்கொடுமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இந்த நீண்டகாலச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற மற்றொரு வழக்கில், வின்சென்ட் சான் என்ற காப்பக ஊழியர் குழந்தைகளுக்குத் தூக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அண்மையில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 

இத்தகைய தொடர்ச்சியான குற்றச் சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற கொடூரங்களைத் தடுக்க, காப்பகங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்குவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு தற்போது ஆலோசித்து வருகிறது.

தங்கள் குழந்தைகளை நம்பி ஒப்படைக்கும் காப்பகங்களிலேயே இத்தகைய அநீதிகள் நடப்பது, பெற்றோர்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஓரளவிற்கு நீதியை வழங்கினாலும், காப்பகங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset