செய்திகள் உலகம்
அமீரகத்தில் ஈகைத் திருநாள் தொழுகைக்குப் புதிய கட்டுப்பாடுகள்: பாதுகாப்பு கருதி அரசு எடுத்த அதிரடி முடிவு
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழுகையாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அய்டில்ஃபித்ரி தொழுகைகள் திறந்தவெளிகள் அல்லது தொழுகை மைதானங்களில் நடத்தப்படாமல், உள்ளரங்குகளில் நடத்தப்பட உள்ளன.
ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் துறையுடன் இணைந்து துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள், தொண்டு நடவடிக்கைகள் துறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வழிபாட்டாளர்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, பள்ளிவாசல்களில் ஈகைத் தொழுகையை நிறைவேற்ற முன்கூட்டியே வர வேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொள்கிறது," என்று அரசாங்க ஊடக அலுவலகம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
ஈகைத் திருநாள் மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று அரபு நாடுகள் முழுவதும் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்புப் படையினர் 314 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,672 ஆளில்லா விமானங்களைச் செயலிழக்கச் செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆயுதப் படைகளின் இரண்டு உறுப்பினர்கள் தங்கள் தேசிய கடமையை ஆற்றும்போது கொல்லப்பட்டனர். மேலும், பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம், பாலஸ்தீனிய நாட்டினரைச் சேர்ந்த ஆறு பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 12:09 pm
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 10:49 am
வான்தாக்குதலில் ஈரானின் உயரதிகாரி அலி லாரிஜானி பலி: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
March 18, 2026, 9:54 am
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
March 17, 2026, 2:53 pm
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி
March 17, 2026, 11:04 am
