செய்திகள் உலகம்
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
கொழும்பு:
இலங்கை குறுகிய வேலை வார வேலை நாட்களை அறிவித்துள்ளது. வரும் புதன்கிழமை 18ஆம் தேதி அது நடப்புக்கு வரும்.
அரசுத் துறைக்கு இது பொருந்தும். தனியார் துறையும் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
அதன்படி இலங்கையில் இனி ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை.
மருத்துவமனைகள், துறைமுகங்கள், அவசரச் சேவைகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. அவை வழக்கம்போல் இயங்கும்.
அரசாங்கம் அனைத்துப் பொது விழாக்களையும் நிறுத்தி வைத்துள்ளது.
முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்களை அது கேட்டுக்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் கட்டுப்பாடு தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு வாகன ஓட்டுநனருக்கும் வாரத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது.
நாட்டின் பெட்ரோல், டீசல் இருப்பு கிட்டத்தட்ட ஆறு வாரம் மட்டுமே நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு டிரம்ப் கடும் அதிருப்தி
March 17, 2026, 10:36 am
பாக்தாதில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
March 16, 2026, 12:03 pm
‘தவறான கணிப்பு அல்ல, போர் குற்றம்’ – WHO கடும் கண்டனம்
March 16, 2026, 11:58 am
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்: 153 மருத்துவக் கட்டமைப்புகள் சிதைவு
March 16, 2026, 11:03 am
பாக்தாத், துபாய் சர்வதேச விமான நிலையங்கள் தாக்குதல்
March 16, 2026, 11:02 am
