செய்திகள் உலகம்
மேற்கு ஆசிய பதற்றம்: தேசிய தினக் கொண்டாட்டத்தை ரத்து செய்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
மேற்கத்திய ஆசியாவில் நிலவும் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பாகிஸ்தான் அரசு, இந்த ஆண்டின் தேசிய தினப் பேரணி, தொடர்புடைய அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எரிசக்தி கையிருப்பு, உலகளாவிய எண்ணெய், விலை உயர்வு நிலைமையைக் கருத்தில் கொண்டு, இதற்கான முடிவு எடுத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுவாக, மார்ச் 23-ஆம் தேதி கொண்டாடப்படும் பாகிஸ்தானின் தேசிய தினம், இராணுவப் படை பேரணிகள், விமானக் காட்சி, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுவதாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டில் கொடி ஏற்றும் மட்டுமே நடக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் எரிசக்தி பொருட்களைச் சேமிக்கும் விதமாக அரசுப் பணியாளர்களின் வேலை நாட்கள் நான்கு நாளாக குறைக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்து பணியாற்றும் முறையும் பள்ளிகளை மூடும் நடவடிக்கைகளுக்கு இணங்க இந்த நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.
வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதியை நம்பியிருக்கும் பாகிஸ்தான், மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதலின் போது விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குக் கடற்படை பாதுகாப்பு அளித்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய், எரிசக்தி விலையின் உயர்வால் பொது மக்களும் சுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நிலைமையின் தீவிரத்தினால் ஈரானில் இருந்து சுமார் 4,000 பாகிஸ்தான் குடிமக்களும் மாணவர்களும் தாயகம் திரும்பியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டில் வரும் மாதத்திற்கான கச்சா எண்ணெய், பெட்ரோலியம் தயாரிப்புகள் போதுமான அளவில் இருப்பதாகவும், ஏப்ரல் மாதம் வரை வழங்கல் தொடர நன்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 10:49 am
வான்தாக்குதலில் ஈரானின் உயரதிகாரி அலி லாரிஜானி பலி: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
March 18, 2026, 9:54 am
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
March 17, 2026, 2:53 pm
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
