நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ:

மெக்சிகோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக அந்நாட்டின் அரசுடைமை எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்குப் பகுதியில் உள்ள டபாஸ்கோ மாநிலத்தில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து டோஸ் போகாஸ் தொழிற்சாலையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதன் பின்னர் தீப்பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் நிறுவன ஊழியர்களும் அடங்குவர். அதிகாலை நேரத்தில் ஹைட்ரோகார்பன் சேமிப்பு பகுதியைச் சுற்றியுள்ள இடத்தில் தீப்பற்றியது. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முழுமையாக அணைக்கப்பட்டது.

தற்போது பொதுமக்கள் அல்லது தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய காணொலிகளில், கனமழையின் போது கடற்கரை அருகிலுள்ள எண்ணெய் வளாகம் தீயில் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

அண்மைக் காலங்களில் இந்த நிறுவனத்தில் இதுபோன்ற பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset