நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 13 கடைகள் சிக்கின: அமலாக்கத்துறை நடவடிக்கை

சிங்கப்பூர்:

சிங்கப்பூர், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 13 கடைகள் சட்டவிரோதமாக மது விற்றதாகச் சோதனை செய்யப்பட்டன.

இம்மாதம் 5ஆம் தேதிக்கும் 20ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒரு கடை அதன் ஒரு பகுதியை மதுபானக் கூடமாகச் சட்டவிரோதமாக மாற்றியதாக அதிகாரிகள் அந்த சோதனையின்போது கண்டுபிடித்தனர்.

மேலும் 3 கடைகள் தகுந்த உரிமமின்றி கள்ளத்தன்மாக மது விற்றுள்ளது.

9 கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு அப்பால் மது விற்றதாக அதிகாரிகள் கூறினர்.

லிட்டில் இந்தியாவில் வாரநாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே மது விற்க அனுமதி உண்டு.

வாரயிறுதி நாள்களில் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே மது விற்கமுடியும். 

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்போ அல்லது அதற்கு பிறகோ மது விற்கும் கடைகளுக்கு 10,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் மது விற்கும் கடைகளுக்கு 20,000 சிங்கப்பூர் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிவோருக்கு அபராதத்தோடு மூன்று மாதச் சிறைத்தண்ண்டனையும் விதிக்கப்படலாம்.

ஆதாரம்: 8World

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset