நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனை கைப்பற்ற ரஷியா திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்:

உக்ரைனைக் கைப்பற்றுவதற்காக 1.75 ராணுவ வீரர்களை அந்த நாட்டு எல்லையில் குவிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உக்ரைன் மீது படையெடுத்து, அந்த நாட்டைக் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதற்கான தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கலாம்.

இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, சுமார் 1.75 லட்சம் படை வீரர்களைக் குவிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே அவர்களில் பாதி பேர் உக்ரைன் எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர்.

அத்துடன் கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்களுடன் கூடிய 100 பட்டாலியன்களையும் உக்ரைன் எல்லையையே நோக்கி அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது.

தாக்குதல் நடவடிக்கையை தொடங்குவதற்கு சாதகமாக, கிழக்கு உக்ரைன் எல்லைப் பகுதியில் உக்ரைன் படைக் குவிப்பு போன்ற பிரசார உத்தியை ரஷியா தீவிரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset