செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடி: 24 பேர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 23 பேர் தங்களது வங்கிக் கணக்குகளை மோசடிக் கும்பல்களிடம் விற்றவர்கள் அல்லது வாடகைக்கு விட்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும் 9 பேர் விசாரிக்கப்படுவதாக சிங்கப்பூர்க் காவல்துறை சொன்னது.
தீவு முழுதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் சிக்கினர்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் (MAS) அதிகாரிகள் போல் நடித்து ஆடவர் ஒருவர் ஏமாற்றப்பட்டதாகக் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி புகார் கிடைத்தது.
ஆடவர் 1.1 மில்லியன் வெள்ளி வரை இழந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடவர் மோசடிக் கும்பலுக்குப் பணத்தை மாற்றிவிடும்போது வங்கிக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வங்கி அவரை இருமுறை தொடர்புகொண்டது.
ஆனால் வங்கி அழைத்தால் எப்படிப் பேசவேண்டும் என்று மோசடிக் கும்பல் அவருக்குப் பயிற்சி அளித்திருந்தது. தாம் முதலீட்டுக்காகப் பணத்தை மாற்றிவிட்டதாக ஆடவர் வங்கியிடம் கூறி சமாளித்திருக்கிறார்.
ஆனால் மீண்டும் பணத்தை மாற்றிவிட ஆடவர் முயற்சி செய்தபோது வங்கிக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
மோசடித் தடுப்பு நிலையத்திடம் வங்கி புகார் செய்தது. இதன்வழி மோசடிக் கும்பலின் செயல் அம்பலமானது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 5:31 pm
எல்லைச் சுவருக்காக மக்களின் வீடுகள் பறிப்பு: ட்ரம்ப் அரசின் அதிரடி முடிவு
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
