செய்திகள் இந்தியா
காங்கிரஸை ஒதுக்கி வைத்து பாஜகவை எதிர்க்க முடியாது: மம்தாவுக்கு சிவசேனை அறிவுரை
மும்பை:
தேசிய அரசியலில் இருந்து காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது ஆளும் பாஜகவையும், பாசிஸ சக்திகளையும் வலுப்படுத்துவதற்கு சமம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இந்த அறிவுரையை சிவசேனை தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனை நாளிதழான "சாம்னா' வில் தெரிவிக்கப்பட்டிப்பது:
மம்தா பானர்ஜி மும்பை வந்து சென்ற பின், எதிர்க்கட்சிகள் துரிதமாக செயல்படத் தொடங்கியுள்ளன. பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை நிலவுகிறது.
எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் பாஜகவை எதிர்கொள்வது குறித்து யாரும் பேசக் கூடாது. கூட்டணிக்கு யார் தலைமைத் தாங்குவது என்பது பிரதானமானதல்ல. அனைவரும் ஒன்று சேர்வது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மோடிக்கும் பாஜகவுக்கும் எதிரானவர்களான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று கருதினால், அது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சந்தித்துள்ள வீழ்ச்சி கவலைக்குரியது என்றாலும், அதனை இன்னும் கீழே தள்ளி அதன் இடத்தை ஆக்கிரமிக்கத் திட்டமிடுவது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்
September 6, 2026, 4:23 pm
செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு மோடி அறிவுரை
September 5, 2026, 5:23 pm
உள்ளூர் மொழியைக் கற்க டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓராண்டு அவகாசம்: மஹாரஷ்ட்ரா அரசு உத்தரவு
September 5, 2026, 11:13 am
