செய்திகள் இந்தியா
குஜராத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டால் ஸ்மார்ட் போன் தரப்படும்: ராஜ்கோட் ஆணையர் அறிவிப்பு
ராஜ்கோட்:
ஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்து செய்திகள் வந்தவுடன் இந்தியாவில் மீண்டும் தடுப்பூசி போடுவதில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அக்கறை காட்டி வருகின்றன. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மக்கள் தடுப்பூசி போடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. அதனால், இரண்டாவது தடுப்பூசி போடுபவர்களுக்கு ஸ்மார்ட் போன் தரப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு என்பதே அந்த அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக ஈர்த்துள்ளது.
ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-
‘ராஜ்கோட் நகராட்சி சுகாதார மையங்களின் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த சுகாதார குழு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.’
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 5:52 pm
ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்போருக்குப் புதிய விதிமுறைகள்: ஏப்ரல் 1 முதல் அதிரடி மாற்றம்
April 30, 2026, 5:33 pm
விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடூரம்: கணவர் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
April 30, 2026, 10:54 am
பெங்களூருவில் சோகம்: மருத்துவமனைச் சுவர் சரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாகப் பலி
April 29, 2026, 5:46 pm
இந்தியாவில் சுட்டெரிக்கும் வெயில்: 47.6 டிகிரி செல்சியஸைத் தொட்ட வெப்பம்
April 29, 2026, 12:45 pm
வங்கிப் பணத்திற்காகத் தம்பியின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்த அண்ணன்: ஒடிசாவில் நிகழ்ந்த சோகம்
April 29, 2026, 12:30 pm
எரிபொருள் வரி விலக்கு இல்லாமல் இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடு முடங்கும் நிலையில் உள்ளது
April 28, 2026, 4:05 pm
குழந்தை உயிருடன் வாய்க்காலில் வீசப்பட்ட அவலம்: 6-வது பெண் குழந்தை என்பதால் பாரமானதா?
April 28, 2026, 3:48 pm
