நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: 

மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் செயல்படுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வானொலியில் ஒலிபரப்பாகும் மனத்தின் குரல் - மன் கி பாத் - நிகழ்ச்சியில் பேசிய அவர், 

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியப் பண்டிகைகள் உலகின் ஒவ்வோர் மூலையிலும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகின்றன. 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகள் அனைத்து வகையான கலாசாரத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 

மலேசியாவில் உள்ள நமது இந்தியச் சமூகமும் இதுதொடர்பாக பாராட்டத்தக்கப் பணியைச் செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வரலாற்று, கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் தமிழ்ப் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset