நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள நோட்டுகளை வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகின்றது.

நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் யுபிஐ, டெபிட் - கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தை செய்யும் முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ. 28 லட்சம் கோடி பணப் பரிவர்த்தை நடைபெற்றுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கிட்டத்திட்ட ரூ. 300 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

இருந்தாலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு மாறாத மக்களும், சிறிய வியாபாரிகளும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பணத்தையே நம்பியுள்ளனர்.

ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே உள்ளதால் குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20, 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset