நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அஜீத் பவார் விமான விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்: மம்தா கோரிக்கை 

கொல்கொத்தா:

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மரணம் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், அஜீத் பவார் விமான விபத்து குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அஜீத் பவாரின் தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.

தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”அஜீத் பவாரின் மரணச் செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். அவரின் மரணம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, சரத் பவாருடன் இணைவது குறித்து பரிசீலித்து வந்தார்.

இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அஜீத் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset